சிவப்புப் பட்டியலில் இருந்து இலங்கையை நீக்கியது பிரபல நாடு

பிரித்தானியாவின் கொரோனா சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை உள்ளிட்ட 8 நாடுகளை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என பிரித்தானியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 22ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் 8 நாடுகளின் பெயர்களை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு தவிர, துருக்கி, பாகிஸ்தான், மாலைத்தீவு, எகிப்து, ஓமான், பங்களதேஷ் மற்றும் கென்யா ஆகிய நாடுகளும் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்க பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, குறித்த 8 நாடுகளுக்கும் பிரித்தானிய பிரஜைகள் எதிர்வரும் 22ஆம் திகதிக்கு பின்னர் பயணிக்க முடியும்.

அதேபோன்று, குறித்த நாடுகளிலிருந்து பிரித்தானியாவிற்கு வருகைத் தருவோர், கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்டிருந்தால் தனிமைப்படுத்தப்படுத்தல் இன்றி வெளியேற அனுமதிக்கப்படுவர் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.