நீங்கள் மீன ராசியில் பிறந்தவரா? இதோ உங்கள் வாழ்க்கை ரகசியம்

மீன ராசியில் பிறந்த குழந்தைகள் ஒரளவு பிடிவாத குணம் கொண்டவர்கள். அன்பானவர் அனைவரையும் நேசிக்கும் குணம் உடையவர்களாக இருப்பார்கள்.

மீன ராசி கால புருஷ தத்துவத்தின் படி 12வது ராசி. இது ஒரு பெண் ராசி. உபய ராசி. இரட்டை ராசி. இதன் உருவம் இரண்டு மீன்கள். இரண்டு மீன்கள் எதிர் எதிர் திசையில் பிணைத்திருப்பது போன்றது.

உடல் உறுப்புகளில் கால்களைக் குறிக்கிறது. இங்கு சுக்கிரன் உச்சம் பெறுகிறார். புதன் நீச்சம் பெறுகிறார். இந்த ராசியானது சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோருக்கு நட்பு ராசி.

மீனம் ராசியில் பிறந்த குழந்தைகளின் குணநலன்கள்,படிப்பு, ஆரோக்கியம், வேலை வாய்ப்பு பற்றி அறிந்து கொள்வோம்.

எந்த ராசி எப்படி கண்டுபிடிப்பது
குழந்தை எந்த ராசி

குழந்தை பிறந்த உடன் குழந்தையின் நட்சத்திரம் என்ன என்பதை அறிந்து ராசியை தெரிந்து கொள்ளலாம். அன்றைய தினத்தில் சந்திரன் சஞ்சாரிக்கும் நட்சத்திரமே குழந்தையின் ராசி நட்சத்திரம். குழந்தை பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் உங்கள் குழந்தை மீனம் ராசியில் பிறந்த குழந்தை என்பதை அறிந்து கொள்ளலாம்.

மீன ராசி நட்சத்திரங்கள்
அன்பானவர் அழகானவர்

மீனம் ராசியில் பிறந்தவர்கள் நல்ல நிறமும், கம்பீரமான தோற்றத்துடன் சாதாரண உயரத்தை விட சற்று உயரம் குறைந்தவர்களாகவும், ஏர் நெற்றியுடனும் இருப்பார்கள். அழகான தோற்றம் கொண்டவர்கள். அவர்களுக்கு மீன் போன்ற கண்கள் இருப்பது கூடுதல் அழகு. புருவங்கள் வில் போன்றும் அழகாக இருக்கும். நீண்ட மூக்கும், சிறிய குவிந்த உதடுகளும், வரிசையான பற்களும் காணப்படும். மாநிறமும், மிருதுவான கைகளும் அமைந்திருக்கும். கனிந்த பார்வையுடனும் மலர்ந்த முகத்துடனும் காணப்படும் இவர்கள் மற்றவர்களை எளிதில் வசப்படுத்தி விடுவார்கள்.

நேசிக்கும் குணம்
கெட்டிக்காரர்கள்

இந்த ராசி குழந்தைகள் வம்பு சண்டைக்கு போக மாட்டார்கள், அதே நேரத்தில் வந்த சண்டையை விட மாட்டார். உடல் உழைப்பு இல்லாத தொழிலில் ஈடுபடுவார். சுற்றுலா செல்வதில் குறிப்பாக ஆலயங்களுக்கு தீர்க்க யாத்திரைகளிலும் பயணங்களிலும் அதிகம் பிரியம் உடையவர். அனைவரையும் நேசிக்கும் குணம் உடையவர்.

செல்வாக்கான குழந்தை
வசதியான வாழ்க்கை

உங்கள் குழந்தைகளுக்கு புகழ், செல்வாக்கு, அந்தஸ்து, கவுரவம் அனைத்தும் கடைசி வரை இருக்கும். சிறு வயதில் இருந்தே நவீன வசதிகளுடன் கூடிய அழகிய வீடு கட்ட வேண்டுமென்று ஆர்வம் இருக்கும். வீடு, இடம், தோட்டம் போன்றவைகளை வாங்கி அதன் மூலம் செல்வத்தை சேமிப்பார்.

பிடிவாத குணம்
தன்னம்பிக்கைவாதி

ஒரளவு பிடிவாத குணம் உடையவர்கள். ஆனாலும் மற்றவர்கள் ஏதாவது சொல்லி விடுவார்களோ என நினைப்பார்கள். எப்போழுதும் தங்களுடைய கல்வி மற்றும் திறமைகள் பற்றி ஒரு அசாதரணமாக தன்னம்பிகை இருக்கும். ஆனால் மிகவும் உண்மையான நண்பர்களாக இருப்பாகள்.

சுவை பிரியர்
ருசிக்கு அடிமை

இந்த ராசியில் பிறந்த குழந்தைகள் நேரம் தவறாமல் சூடான உணவு வகைகளை விரும்பி சாப்பிடுவார்கள். அம்மாக்கள் ஆறிப்போன உணவை வைத்தால் சாப்பிட யோசிப்பார்கள். போஜனப் பிரியர் என்பதால் எதையும் ரசித்து ருசித்து சாப்பிடுவார். வாசனை திரவியங்கள் மேல் ஆசையுடையவர்.

சாதனையாளர்
வாய் சொல்லில் வீரர்

இவர்கள் மிகப் பெரிய அதிகாரியாகவும், ஆராய்ச்சியாளராகவும், கல்வித் துறை மற்றும் வழக்கறிஞர் துறையைத் தேர்ந்தெடுக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். அரசு வழி அலுவலர்கள், நிதி சேமிப்பு நிலையங்கள், கணக்கு பார்க்கும் பணிகள், பேச்சாளர்கள் போன்ற துறைகளிலும் தேர்ந்தெடுத்து அதில் ஈடுபட்டால் வெற்றி காணலாம்.

அன்பானவர்
பொறுமைசாலிகள்

இந்த ராசி குழந்தைகளிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். மற்றாவர்களுக்கு நல்ல அறிவுரைகளை கூறுவதில் வல்லவர். பிறரை தன் வசமாக்கிக் கொள்வதில் கெட்டிக்காரர்கள். எதைப்பற்றியும் அவராகவே ஒரு முடிவைச் செய்துக் கொண்டு அப்படித்தான் நடக்கும் என்று நினைத்துக் கொண்டு செயல்படுவார்கள்.

என்ன நோய்கள் பாதிக்கும்
நோய் பாதிப்பு

மீன ராசியில் சூரியன் இருந்தால், ரத்த ஓட்டம் சம்பந்தமான நோய்கள் வரக்கூடும். இங்கு சந்திரன் இருந்தால் சிலர் குடிப்பழக்கத்துக்கு ஆளாகக்கூடும். செவ்வாய், இருந்தால், கால்களில் எலும்பு முறிவு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். புதன் இருந்தால், நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படக்கூடும். குரு இருந்தால், கால்களில் வீக்கம், அடிவயிற்றில் கட்டிகள் போன்றவை ஏற்படக்கூடும். சனி முடக்குவாதத்தை ஏற்படுத்தக்கூடும்.இவர்களுக்கு கண் பார்வைக் கோளாறுகள் மற்றும் கட்டிகள் போன்றவைகள் வரலாம். சுக போகங்களில் அதிக அளவில் ஈடுபாடு காரணமாக நரம்பு தளர்ச்சிகள் சிலருக்கு வரலாம்.

செல்ல வேண்டிய ஆலயம்
திருவானைக்காவல் ஆலயம்

கடலும், நீரும் அதைச் சார்ந்த பகுதிகளையுமே மீனம் ராசியை குறிக்கிறது. உலகின் ஆதாரமும் நீர்தான். உலகின் முதல் உயிரும் மீன்தான். பஞ்சபூதங்களில் நீரின் தத்துவத்தைச் சொல்லும் கோயிலுக்குச் செல்லும் போது உங்களுக்கு நிச்சயம் மாற்றம் ஏற்படும். அப்படி நீர்த் தத்துவத்தை உணர்த்துவதும், பஞ்ச பூதங்களில் நீருக்கு உரிய தலமாக விளங்குவதும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம் சென்று வழிபடலாம்.