இலங்கைப் பெண்ணுக்கு அமெரிக்காவில் கிடைத்த பெரிய கௌரவம்!

இலங்கையை பூர்வீகமாக கொண்ட அஷானி வீரரத்ன, அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் ஆலோசனை சபையின் உறுப்பினராக , ஜனாதிபதி ஜோ பிடனால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழக ஆராய்ச்சியாளரான அஷானி வீரரத்னவிற்கு செப்டம்பர் 15 அன்று வெள்ளை மாளிகை இந்த நியமனத்தை அறிவித்தது.

தேசிய புற்றுநோய் ஆலோசனைக் குழு தேசிய புற்றுநோய் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தேசிய சுகாதார நிறுவனத்தில் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் இயக்குநருக்கு ஆலோசனை மற்றும் உதவி வழங்கும்.

புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அஷானி வீரரத்ன, கடந்த 2019 முதல் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பீடத்தில் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகின்றது.