யாழில் பகலில் நடந்த கொள்ளை ! மாட்டிக்கொண்ட திருடர்கள்

யாழ்.நகரில் உள்ள வீடொன்றை சில தினங்களுக்கு முன் உடைத்து சுமார் 10 பவுண் தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருந்தது.குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் யாழ்.குருநகரை சேர்ந்த 24 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதுடன் 5 பவுண் தங்க நகை மீட்கப்பட்டுள்ளது.

precious gold objects on white background

இதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்படைய மேலும் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர்.

யாழ்.நகரில் சுபாஸ் ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் கடந்த 15ம் திகதி தாயும், மகளும் வேலைக்கு சென்றிருந்த நிலையில், வீட்டை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்து சுமார் 10 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்து சென்றிரக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்.குற்றத்தடுப்பு பிரிவில் அன்றைய தினமே முறைப்பாடு வழங்கப்பட்டது. அதுதொடர்பில் பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

விசாரணைகளின் அடிப்படையில், குருநகரைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 5 தங்கப் பவுண் நகைகள் கைப்பற்றப்பட்டன. சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவர் தலைமறைவாகியுள்ளார்.