போலிச் செய்தியால் மதுபானசாலைகளில் நிரம்பி வழிந்த கூட்டம் !

நாட்டில் மூடப்பட்டிருந்த மதுபானசாலைகள் மற்றும் க்ளப்புகள் இன்று முதல் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அறிவிப்பு வெளியாகி சிறிய நேரத்தினிடையே மதுக்கடைகளுக்கு முன்பாக பாரிய சனநெரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இதேவேளை பீர் வகையிலான மதுபானங்களை விற்பனை செய்யும் மதுக்கடைகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிட ஹோட்டல்களில் மதுபானத்தை விற்பனை செய்ய அனுமதிப்பத்திரம் பெற்ற இடங்களில் அவற்றை தொடர்ந்து செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

மதுபானசாலை திறக்க அனுமதி வழங்கப்பட்டதாக போலியான தகவல்கள் வெளியானதையடுத்து ஹட்டன், நுவரெலியா உட்பட நாட்டின் பல பிரதேசங்களில் மதுபானசாலைகள் திறக்கப்பட்ட நிலையில் குடிமகன்கள் பலரும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

பலரும் மதுபானங்களை கொள்வனவு செய்வதற்காக தனிமைப்படுத்தல் ஊரடங்கையும் பொருட்படுத்தாது நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில் வெளியான அறிவிப்பு அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.