கொழும்பில் திடீரென உயிரிழந்த இளைஞன்…!! கொரோனா பீதியில் பொதுமக்கள்..!!

கொழும்பில் இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்தமையினால் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் ஆட்டுப்பட்டித் தெருவில் உயிரிழந்த நிலையில், அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.எந்தவித நோய் அறிகுறிகளும் இன்றி இவர் உயிரிழந்த காரணத்தினால் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.இதன் காரணமாக அவரது உடல் மாதிரிகளை பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.போதைப்பொருளுக்கு தீவிரமாக அடிமையான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இதேவேளை அண்மைக்காலமாக கொழும்பின் பல பகுதிகளில் திடீர் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.