உங்க உடலில் இந்த இடத்தில் மச்சம் இருந்தால் செல்வம் கொட்டுமாம்.! உங்களுக்கு இருக்கா மச்சம்

உலகில் பிறந்த ஒவ்வொருவரின் உடலிலும் தனிப்பட்ட அடையாளத்தைக் குறிக்கும் வகையில் மச்சம் இருக்கும். பண்டைய முனிவர்கள், உடலில் அடையாளமாக உள்ள மச்சத்தை ஆராய்ந்ததில், அது ஒருவரின் தனிப்பட்ட குணாதிசயம் மற்றும் எதிர்காலத்துடன் தொடர்புள்ளதாக தெரிய வந்தது.

இந்து ஜோதிடத்தில், மச்சம் இருக்கும் இடம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மச்சம் இருக்கும் இடம் ஒருவரது வெற்றி மற்றும் தோல்விகளைப் பற்றி சொல்லும் என்பது தெரியுமா? அதுமட்டுமின்றி, இந்த மச்சம் ஒருவரது அதிர்ஷ்டத்தைப் பற்றியும் கூறும்.

இப்போது நாம் உடலின் எந்த பகுதியில் மச்சம் இருந்தால், அது அவரிடம் செல்வம் கொட்டும் என்று கூறுகிறது குறித்து காண்போம்.

வலது கன்னம்

ஒருவரது வலது கன்னத்தில் மச்சம் இருந்தால், திருமணத்திற்கு பின் அவர் மிகுந்த செல்வந்தராகும் வாய்ப்புள்ளதைக் குறிக்கிறது.

உதட்டிற்கு மேல்

ஒருவருக்கு உதட்டிற்கு மேல் மச்சம் இருந்தால், அது அவர் எதிலும் வெற்றியைக் காண்பார்கள் மற்றும் இவர்களிடம் செல்வம் எப்போதும் கை நிறைய இருக்கும் என்பதைக் குறிக்கும்.

மூக்கு

மூக்கின் நுனி அல்லது வலது பக்கத்தில் மச்சம் இருந்தால், அது அந்த நபர் கட்டாயம் ஒரு நாள் செல்வந்தராவார் என்பதைக் குறிக்கும். மேலும் 30 வயதிற்குள் வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்புள்ளதைக் குறிக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த இடத்தில் மச்சம் இருந்தால், எதிலும் வெற்றியை காண்பார்கள். முக்கியமாக இவை அனைத்தும் திருமணத்திற்கு பின் நடக்கும்.

உள்ளங்கால்

 

ஒருவருக்கு உள்ளங்காலில் மச்சம் இருந்தால், அவர்கள் பயணத்தை விரும்புவார்கள் மற்றும் உலகம் முழுவதையும் சுற்றி பார்க்கும் வாய்ப்புள்ளவர்கள் என்பதைக் குறிக்கிறது.

இடுப்பு பகுதியில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். இத்தகையவர்கள் செல்வந்தர்களாவார்கள் என்பதைக் குறிக்கிறது.

நெற்றிப் பகுதி..

ஒருவருக்கு நெற்றியின் மையப் பகுதியில் மச்சம் இருந்தால், அது அவர்கள் வாழ்வில் சீக்கிரம் நிலைப்பெற்று இருப்பார்கள். மேலும் இத்தகையவர்களிடம் போதுமான அளவில் பணம் எந்நேரமும் இருக்கும்.
வலது உள்ளங்கை

வலது உள்ளங்கையில் மச்சம் இருப்பவர்கள், மிகுந்த செல்வத்துடன், எதிலும் வெற்றியைக் காண்பவர்களாக இருப்பர். அதிலும் உள்ளங்கையின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால், அது இளமையிலேயே செல்வந்தர்களாகும் வாய்ப்புள்ளதைக் குறிக்கிறது. ஒரு வேளை உள்ளங்கையின் கீழ் பகுதியில் மச்சம் இருந்தால், அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு போராடி வெற்றியையும், செல்வத்தையும் கட்டாயம் பெறுவார்கள்.