இலங்கைக்கும் சுவிஸ்லாந்துக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பம்

இலங்கைக்கும் சுவிஸ்லாந்துக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது என சுவிஸ் சர்வதேச விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி குறித்த விமான சேவையானது எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வாரத்தின் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் குறித்த விமான சேவையானது சுவிஸ்லாந்தின் சூரிச் நகருக்கு மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.