நாட்டில் அரிசி வகைகள் சிலவற்றின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!

நாட்டில் அரிசி வகைகள் சிலவற்றின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு மற்றும் கூட்டுறவு அமைச்சு என்பன அரிசியின் கட்டுப்பாட்டு வர்த்தமானி அறிவிப்பை திருத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய சம்பா மற்றும் கீரி சம்பா ஆகியவற்றின் கட்டுப்பாட்டு விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் பச்சரிசி மற்றும் நாட்டரிசி என்பவற்றின் விலைகளைத் திருத்தாதிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

இதன்படி சம்பா அரிசியின் விலையை ஒரு கிலோ 103 ரூபாவிலிருந்து 120 ரூபாவாக உயர்த்த முன்மொழியப் பட்டுள்ளது. கீரி சம்பாவின் கட்டுப்பாட்டு விலையை ஒரு கிலோ 125 ரூபாவிலிருந்து 145 ரூபாவாக அதிகரிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகம் நியமிக்கப்பட்ட பின் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.