நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் வரும் ஒக்டோபர் முதலாம் திகதி வரை நீடிப்பு

நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் வரும் ஒக்டோபர் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது நாட்டில் நடைமுறையில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை, ஒக்டோபர் 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.00 மணி வரை நீடிப்பதற்கு, இன்று (17) முற்பகல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசேட கொவிட் ஒழிப்பு செயலணிக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.