யாருக்கு எல்லாம் எண் 13 பற்றி தெரியும்? இவங்க கிட்ட மத்தவங்க கவனமா இருங்க.!

13 என்ற எண் சிலருக்கு ராசியானதாக இருக்கும். சிலர் இந்த எண்ணிற்கு பயப்படுவர். வெளிநாடுகளில் 13 A என்று ஓட்டல்களில் எழுதியிருப்பார்கள். 1 என்ற எண் சூரியனின் ஆதிக்கத்தையும், 3 என்ற எண் குரு ஆதிக்கத்தையும் கொண்டிருக்கும்.

சித்திரை மற்றும் ஆவணி மாதம் பிறந்தவர்களின் ஜாதகத்தில் குரு, சூரியனைப் பார்க்கும் விதத்தில் இருந்தால் அவர்களுக்கு பதிமூன்று என்ற எண் மிகுந்த யோக எண்ணாகும்.

வீட்டு எண், கடை எண், கல்யாண நாள், முக்கியச் சம்பவங்கள் நடைபெறும் தினங்கள் ஆகியவற்றைக் கூர்ந்து கவனித்தால் பதிமூன்று என்ற எண் பின்தொடர்ந்து வந்து கொண்டேஇருக்கும்.

‘ஸ்ரீராம் ஜெயராம், ஜெய ஜெய ராம்’ என்ற ராமநாமம் கூட எழுத்தில் பதிமூன்றாகத்தான் வருகிறது. அதை உச்சரித்தால் நமக்கு அற்புதமான பலன் கிடைக்கும்.