ஊரடங்கு நீடிப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் இன்று!

நாட்டில் அம்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பதா இல்லையா என்கிற தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி தலமையில் கோவிட் ஒழிப்பு செயலணி இன்று பகல் கூடுகிறது. இந்த சந்திப்பில் மேற்படி தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் நாட்டில் தற்பொழுது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை வரும் 21ம் திகதி முதல் நீக்குவதற்கு பெரும்பாலும் முடிவு செய்யப்படும் என்றே தகவல்கள் வெளியாகியுள்ளன.