நீங்கள் இந்த ராசிக்காரர்களை லவ் பண்ணினால் நடுத்தெருவில் தான் நிற்கனுமாம்.! கொஞ்சம் உஷாரா இருங்கள் நண்பர்களே

ஜோதிடம் ஒவ்வொரு ராசிக்கார்களும் தங்களின் திருமணம் மற்றும் காதல் உறவில் எப்படிபட்டவர்கள் என்பதை பற்றி கூறுகிறது.

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களை அந்தளவிற்கு நம்ப முடியாது. சார்பில்லாமல் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களான இவர்கள் தங்கள் செயல்களுக்கான விளைவுகளை முழுமையாக கருதுவதற்கு, முன்னதாகவே செயல்பட தொடங்கி விடுவார்கள்.
அதனால் பல காதலர்களையும் பல உறவுகளையும் கொண்டிருப்பவர்கள். எனவே இவர்களிடம் சற்று உஷாராக இருக்க வேண்டும் என்று ஜோதிடம் கூறுகிறது.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் முழுமையான நேர்மை குணத்தை உடையவர்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் எந்தவொரு பிரச்சனையையும் சமாளிக்கும் ஆற்றல் படைத்தவர்கள்.
இவர்கள். திருமணம் அல்லது காதல் சார்ந்த உறவுகளில் மிகவும் பணிவாக இருப்பார்கள்.

மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களை அந்தளவிற்கு நம்ப முடியாது. இவர்கள் துணிச்சல் மிக்கவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள். உற்சாகத்துடன் இருப்பதை நம்பும் இவர்கள் சில நேரங்களில் ஆபத்தானவர்களாகவும் திகழ்வார்கள்.
இவர்கள் காதல் வந்த வேகத்தில் கழற்றி விடக்கூடியவர்கள். மேலும் இவர்கள் உணர்ச்சி அல்லது மன ரீதியான நிலையின் தூண்டுதலையே விரும்புவார்கள்.

கடகம்

கடகம் ராசிக்காரர்கள் முழுமையான நேர்மை குணம் கொண்டவர்கள். இதனால் இவர்கள் குடும்ப பற்று சார்ந்தவர்களாக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் வீட்டையும், குடும்பத்தையும் தான் பெரிதும் விரும்புவார்கள்.
எனவே கடக ராசிக்காரர்கள் தங்களின் உறவை அவ்வளவு சுலபத்தில் உடைக்க மாட்டார்கள். தங்களுக்கும் தங்களின் துணைக்கும் இடையே ஏற்படக்கூடிய பிரச்சனைகளை தீர்க்கவே அவர்கள் முற்படுவார்கள்.

சிம்மம்

சிம்மப் ராசிக்காரர்களை அந்தளவிற்கு நம்ப முடியாது. இவர்கள் பல்வேறு காதலர்கள் மற்றும் உறவுகளை கொண்ட நீண்ட வரலாற்றைக் கொண்டிருப்பார்கள். மேலும் தனக்கு சரியான துணைக்காக எதிர்ப்பார்ப்பவராக இருப்பார்கள்.
ஆனால் கிடைத்த உறவு தனக்கு ஒத்து வராது என்று சிம்மராசிக்காரர் நினைத்து விட்டால், வளமுள்ள நிலத்திற்கு அவர் எளிதில் மாறிவிடுவார்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களை அந்தளவிற்கு நம்ப முடியாது. அதற்கு காரணம் கன்னி ராசிக்காரர்கள் நேர்மையையும் உண்மையான நெருக்கத்தையும், எதையும் விட பெரிதாக மதிப்பிடுவார்கள்.
ஆனால் அவர்களின் உறவு நிம்மதி அளிக்கவில்லை என்றால் மற்றொரு உறவை நிலைநிறுத்த அவர்கள் தயங்காத குணத்தை உடையவர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களை முழுமையாக நம்பலாம். இவர்கள் நம்பிக்கைக்கு உண்மையாக இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் உறவு இறந்து போனாலும் கூட அவர்களின் நினைவில் இருப்பார்கள். இதனால் இவர்கள் தங்களின் திருமணம் மற்றும் காதல் உறவில் மதிப்பு அளிப்பவராக இருப்பார்கள்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களை ஆச்சரியமூட்டும் வகையில் நம்பலாம். தீவிர நம்பிக்கைக்கு புகழ் பெற்றவர்களாக இருப்பார்கள்.
ஆனால் இவர்கள் தங்களின் உறவில் மீதுள்ள மரியாதையில் கடுகளவு குறைவு ஏற்பட்டாலும், அவர்கள் வேறொரு காதலை நாடி சென்று விடும் குணங்களை கொண்டவர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களை அந்தளவிற்கு நம்ப முடியாது. ஏனெனில் இவர்களுக்கு விதிமுறைகள் என்றாலே பிடிக்காது. குறிப்பாக கணவன் மனைவி உறவில் ஏற்படும் கட்டுப்பாடுகளும் கூட.
இந்த ராசிக்காரர்கள் காதல் மற்றும் திருமண உறவில் ஏமாற்றுபவர்கள் அல்ல. விதிமுறைகளுக்கு மட்டும் விரும்பாதவர்களாக இருப்பார்கள்.

மகரம்

மகரம் ராசிக்காரர்களை முழுமையாக நம்பலாம். இவர்கள் குறிப்பாக உறவுகளின் மீது எந்த வடிவிலான வெற்றிக்கும் கடின உழைப்பும், தீர்மானமும் தேவை என்பதை உணர்ந்தவர்கள்.
இவர்கள் எப்போதும் தங்களின் உறவிலும் தடைகள் ஏற்படும் போது, அதனை சீர் செய்யும் பொறுமையை மகர ராசிக்காரர்கள் கொண்டிருப்பார்கள்.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களை அந்தளவிற்கு நம்ப முடியாது. இவர்களை அவ்வளவு எளிதில் திருப்தி படுத்த முடியாது. சார்பில்லாமல் இருக்கும் இவர்கள் வழக்கத்திற்கு மாறானவர்கள்.
இந்த ராசிக்காரர்கள் மீது காதலில் விழும் பலரும் திருமண பந்தம் அல்லது தீவிர உறவை தவிர்த்து விடுவார்கள்.

மீனம்

மீனம் ராசிக்காரர்களை அந்தளவிற்கு நம்ப முடியாது. இவர்கள் மிகவும் உணர்ச்சி பூர்வமான ராசிக்காரர்கள். பெரும்பாலும் இவர்கள் உள் உணர்வுகளோடு போரிடுவார்கள்.
இவர்கள் காதல் அல்லது திருமண உறவில் தங்களின் கற்பனை தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்றால் அவர்கள் சுலபத்தில் ஏமாற்றம் அடைபவராக இருப்பார்கள்.