அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை நீடிக்குமாறு விசேட வைத்திய நிபுணர்களின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்தினால், பல ஆபத்தான பேரழிவுகள் ஏற்படும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அந்த சங்கம் அறிக்கை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

இலங்கை தொடர்ந்து அபாயகரமான சிவப்பு மண்டலமாக அடையாளம் காணப்பட்டு வருவதாகவும், சிவப்பு மண்டலத்தில் இருந்து பசுமை மண்டலத்திற்கு நாட்டை கொண்டு வருவதே எங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை, ஆக்ஸிஜனின் தேவை மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்து இருந்தாலும், இவை தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை அமல்படுத்தியதன் ஆரம்பம் மட்டுமே என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையில் ஏற்கனவே 11,699 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 118 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 11,817 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளது.