இலங்கை வர காத்திருக்கும் வெளிநாட்டவர்களிட்கு மகிழ்ச்சியான செய்தி !

முழுமையாக தடுப்பூசியை பெற்றுக்கொண்ட இலங்கையர்கள் நாடு திரும்பும் போது பிசிஆர் சோதனைக்காக ஒரு ஹோட்டலில் தங்க வேண்டிய அவசியமில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


குறித்த நபர்களின் வருகையின் பின்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் அவர்கள் சுகாதார அமைச்சினால் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் இது தொடர்பான புதிய திட்டமானது அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என்றும் குறிப்பிட்ட அமைச்சர், பிசிஆர் சோதனை முடிவுகள் எதிர்மறையாக இருப்பின் அவர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவர்கள் எனவும் கூறினார்.