பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 201 பேர் கொரோனாவால் மரணம்!

பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 30ஆயிரத்து 597பேர் பாதிக்கப்பட்டதோடு 201பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 7இலட்சத்து 312ஆயிரத்து 683பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 34ஆயிரத்து 647பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 12இலட்சத்து 99 ஆயிரத்து 147 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 1,060பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 58இலட்சத்து 78ஆயிரத்து 889பேர் பூரண குணமடைந்துள்ளனர்.