அளவுக்கு அதிகமாக இந்த பச்சை காய்கறிகள் சாப்பிடுகின்றிர்களா? எனிமே சாப்பிடாதீங்க ஆபத்தாம்!

பொதுவாக காய்கறிகளில் நார்ச்சத்து இயற்கையாகவே மிகுந்திருக்கிறது.

உடலில் இயல்பாகவே நார்ச்சத்து இருந்தாலும் ஒரு நாளைக்கு 35 கிராம் அளவு நார்ச்சத்து தேவை அதை காய்கறிகள், பழங்கள் மூலமே பெற்றுவிடலாம். இருப்பினும் இதனை அளவோடு எடுத்து கொள்வது நல்லதாகும்.

இருப்பினும் சில காய்கறிகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் நன்மையை விட தீங்குதான் விளைவிக்கும். அத்தகைய காய்கறிகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

  • முட்டைகோஸ் குடும்பத்தை சேர்ந்த காலிபிளவர், பிராக்கோலி போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அப்படி சாப்பிடுவது வாயு தொல்லை மற்றும் அஜீரண பிரச்சினையை ஏற்படுத்தும்.
  • கத்திரிக்காயை பச்சையாக சாப்பிடுவது வாந்தி, தலைசுற்றல் அல்லது வயிற்றுப் பிடிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக கத்தரிக்காயில் காணப்படும் சோலனைன், நரம்பியல் மற்றும் இரைப்பை குடல் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
  •  பீட்ரூட்டை அதிகமாக உட்கொள்ளும்போது சிறுநீர் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் வெளியேறும். இதற்கு காரணம் பீட்ரூட்டிற்குள் காணப்படும் மூலக்கூறுகள்தான். பீட்ரூட்டை குறைந்த அளவு உட்கொள்வதுதான் நல்லது.
  • வைட்டமின் டி அதிகம் காணப்படும் சிறந்த உணவுப்பொருட்களில் ஒன்றாக காளான்கள் கருதப்படுகிறது. இதனை உட்கொள்ளும்போது சிலருக்கு சருமத்தில் ஒவ்வாமை பிரச்சினை ஏற்படும்.
  • அதிக அளவு கேரட்டை உட்கொண்டால் சருமத்தின் நிறம் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாக மாறக்கூடும். ஏனென்றால், கேரட்டில் பீட்டா கரோட்டின் உள்ளது. இது உடலில் அதிகமாக உள்நுழைந்துவிடும். ஆனால் ரத்தத்தில் கலக்காமல் தோலிலேயே படிந்துவிடும். அதன் காரணமாக கால்கள், கைகள் மற்றும் உள்ளங்கால்கள் போன்ற பகுதிகளில் நிற மாற்றம் தென்படும்.