வைத்தியர் ரபாய்தீன் அவர்கள் கொரோனா தொற்று காரணமாக இன்று காலமானார்

கல்ஹின் பெரியபள்ளி மஹல்லாஹ்வை சேர்ந்தவரும் கட்டுகஸ்தோட்ட வைத்தியசாலையில் பணிபுரிந்தவருமான வைத்தியர் ரபாய்தீன் அவர்கள் கொரோனா தொற்று காரணமாக இன்று காலமானார்.

அன்னார் மௌலவியா பரீனா அவர்களின் அன்புக்கனவரும், சாஜிதா ஆசிரியை, வைத்தியர் ஷகீரா, வைத்தியர் சாபிரா, பாதிமா மற்றும் ஹஸன் ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்கள்.

ஒரு மார்க்கபற்று நிறைந்த, மிகவும் அர்ப்பணிப்பான மருத்துவரை எமது சமூகம் இழந்து நிற்கின்றது.

சமுதாயத்திற்கு பிரயோசனமான இரண்டு பெண் மருத்துவர்களையும் மேலும் மூன்று பெறுமதியான வாரிசுகளை உருவாக்கிச் சென்றுள்ளார்.