சற்று முன்னர் இலங்கையில் உச்சத்திற்கு சென்ற கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை…!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நேற்று  மாலை வரையான நிலைவரப்படி 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று 26 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இதற்கமைய இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 823 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, இதுவரை 232 பேர் குணமடைந்துள்ள நிலையில் 582 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 9 மரணித்துள்ளனர்.பிந்திய இணைப்பு:இதே வேளை, ஏற்கனவே 823 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டார். இதனால் இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 824 ஆக அதிகரித்துள்ளது.