மாத்தளை மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

திருத்த வேலை காரணமாக மாத்தளை மாவட்டத்தின் சில பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்றையதினம் காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் எனவும் மேலும் அநிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை மாவட்டத்தின் உடுகம, பாலபத்வெல, தொஸ்தரவத்த, தும்கொலவத்த, மகுனுகஹருப்ப, சொப்வத்த, சமந்தாவ, கிரிகல்பொத்த மற்றும் நிகவல பி மற்றும் சி பகுதிகளுக்கு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் அறிவித்துள்ளது.