தெஹிவளை – கரகம்பிட்டி பகுதியில் களவாட முயற்சித்த இளைஞர்களை கயிற்றில் கட்டி வைத்து தண்டனை வழங்கிய பொதுமக்கள்

தெஹிவளை – கரகம்பிட்டி பகுதியில் கடையொன்றை உடைத்து களவாட முயற்சித்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்களை பிரதேசவாசிகள் கயிறால் கட்டி வைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது பொது மக்கள் சந்தேகநபர்களை பொலிஸாரிடம் ஒப்படைக்காமல் கயிறால் கட்டி வைத்து தாங்களே தண்டனை வழங்கியுள்ளனர்.

குறித்த இளைஞர்கள் களவாடியதாக சொல்லப்படும் கடையில் எதுவும் திருட்டுப் போயிருக்கவில்லையென தெரிவிக்கும் கரகம்பிட்டிய பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.