இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் கொவிட் தடுப்பூசி போடவில்லை என்றால் உடனடியாக தடுப்பூசியை போட்டுக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சிறப்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த வயதினரிடையே கொவிட் பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும், கொவிட் காரணமாக ஏற்படும் பெரும்பாலான இறப்புகள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

 

தவறான கருத்துக்கள் மற்றும் சித்தாந்தங்கள் காரணமாக, சிலர் கொவிட் தடுப்பூசியை போட்டக் கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.