06 யோகட் வாங்குங்கள் பால்மா தருகின்றோம் – பொதுமக்களை நிர்ப்பந்திக்கும் வர்த்தகர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றசாட்டு

தற்போது நாட்டில் பால்மாவிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பால்மாவை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதுவும் சமுக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் பால்மா ஒன்றை வாங்குவதற்கு 6 யோகட்டுகளை கொள்வனவு செய்யுமாறு சில வர்த்தகர்கள் நிர்ப்பந்திப்பதாக கடும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

பால்மா பைக்கட்டின் விலையினை காட்டிலும் 6 யோகட்களின் விலை அதிகம் என்பதால் பொதுமக்கள் பாரிய அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதனால் அவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.