நாட்டில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 135 பேர் பலி!

நாட்டில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 135 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த அனைவரும் நேற்றைய தினம் (12) உயிரிழந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,431 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் மேலும் 2560 தொற்றாளர்கள் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 488, 482 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, நாட்டில் கோவிட் தொற்றிலிருந்து மேலும் 1,483 பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இதுவரை நாட்டில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 414,295 ஆக அதிகரித்துள்ளது.