இந்த தானம் செய்தால் 21 தலைமுறைக்கும் புண்ணியம் கிடைக்கும்..! வாங்க என்னவென்று பார்ப்போம்

 

நாம் செய்யும் பாவங்களுக்கான பலன்களும் நன்மைகளுக்கான பலன்களும் அடுத்த ஜென்மத்திலும் நாம் அனுபவிப்போம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

தானம் போன்றவற்றினை நாம் செய்யும் போது அதன் பலனானது நமது அடுத்த தலைமுறைக்கும் கிடைக்கும். ஒவ்வொரு தானத்திற்கும் கிடைக்கும் பலன்களானது மாறுபடுகிறது.

அன்னதானம் செய்தால் 3 தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும்.
பித்ருக்களுக்கு உதவினால் 6 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.
அனாதையாக இறந்தவர்களுக்கு அந்நிம கிரியை செய்தால் 9 தலைமுறைக்கு புண்ணியம் கிட்டும்.

திருக்கோவிலில் தீபம் ஏற்றினால் 5 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.
முன்னோர்க்கு திதி பூஜை செய்தால் 21 தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும்.

பசுவின் உயிரை காப்பது 14 தலைமுறைக்கு புண்ணியத்தை தரும்.
பட்டினியால் வருந்தும் ஏழைகளுக்கு உணவளித்தால் 5 தலைமுறை புண்ணியம் சேரும்.

ஏழைப்பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தால் 5 தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும்