இலங்கையில் அதிகரித்த பருப்பின் விலை

இலங்கையில் பருப்பின் விலை மேலும் அதிக்க கூடும் என அத்தியாவசிய உணவுகளின் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுவரையில் சந்தையில் ஒரு கிலோ கிராம் பருப்பின் விலை 250 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளதென அந்த சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது இலங்கைக்கான பருப்பு அவுஸ்திரேலியா மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது.

எப்படியிருப்பினும் கனடாவில் பருப்பு பயிர் செய்கை பாரிய அளவு குறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பருப்பின் விலை இவ்வாறு உயர்வடைய காரணமாகியுள்ளதென அத்தியாவசிய உணவுகளின் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

இதே நிலைமை தொடர்ந்தால் பருப்பின் விலை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் பால் மா கொள்வனவு செய்வதற்காக 5 யோகட் கொள்வனவு செய்ய வேண்டிய கட்டாய நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.