ஐ போன்கள், இலத்திரனியல் பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

இறக்குமதி செய்யும் பாெருட்களுக்கு அரசாங்கம் விதித்திருக்கும் உத்தரவாத தொகை அதிகரிப்பு காரணமாக பெறுமதி மிக்க ஐ போன் வகையான கையடக்க தொலைபேசிகள் 15 வீதத்தினால் அதிகரிக்கலாம்.

அத்துடன் அனைத்துவகையான இலத்திரனியல் பொருட்களின் விலைகளும் தற்போதுள்ள விலையை விட 5 வீதத்தால் அதிகரிக்கலாம் என இலத்திரனியல் பொருட்கள் இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் உறுப்பினரும் இறக்குமதியாளருமான ஜே. உதயகுமார் தெரிவித்தார்.

தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்திருக்கும் உத்தரவாத தொகை அதிகரிப்பு காரணமாக எதிர்நோக்கி இருக்கும் பிரச்சினை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.