பலங்கொடை தள வைத்தியசாலையில் பிறந்து 06 நாட்களான சிசுவிற்கு நேர்ந்த துயரம்!

பிறந்து 06 நாட்களான சிசுவொன்று கொரோனா தொற்றினால் உயிரிழந்த துயர சம்பவம் பலங்கொடை தள வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.

பலங்கொடை – போம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த தாய் ஒருவருக்கு சிசு பிறந்தது. இந்நிலையில் குறித்த சிசு பிறந்த நிமிடத்திலிருந்து நேற்று வரை சுவாசிக்க சிசு சிரமப்பட்டுள்ளதை தொடர்ந்து நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே அச் சிசு நேற்று மாலை உயிரிழந்துள்ளது. இதேவேளை சிசுவின் பெற்றோருக்கு கோவிட் தொற்று இருந்ததா என்பது பற்றிய தகவல் எதுவும் வெளிவரவில்லை.