யாழில் சற்று முன்னர் நடந்த விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்தில் பலி!

யாழ். நகரில் பால் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த முதியவர் ஒருவர் வீதி விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து அவரின் வீட்டு வாசலில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் சின்னத்தம்பி சாந்தகுணமூர்த்தி (வயது 67) என்னும் பொம்மைவெளியைச் சேர்ந்தவரே இவ்வாறு பலியாகி உள்ளார்.

சைக்கிளில் பால் விற்பனையில் ஈடுபட்டு வந்த குறித்த முதியவர், வழமை போன்று பால் விற்பனை செய்துவிட்டு வீட்டு வாசலில் வந்து இறங்கி சைக்கிளைத் திருப்பிய வேளை அராலியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்தார்.

 

இதனையடுத்து உடனே அவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் இடைவழியில் அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.