விஸா நீடிப்புத் தொடர்பில் இலங்கையுள்ள அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் ஒர் முக்கிய அறிவிப்பு..!!

நாட்டில் தற்போது தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் தமது வீசாக்களை நீடித்துக் கொள்ளும் இணையம் மூலமான விண்ணப்பங்கள் எதிர்வரும் 11ஆம் திகதியில் இருந்து ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவுத் திணைக்கள தரவுகளின்படி இலங்கையில் தற்போது சுமார் 10ஆயிரம் வெளிநாட்டவர்கள் தங்கியுள்ளனர்.இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு தடவைகளில் 30 நாட்களுக்கு வீசா நீடிக்கப்பட்டுள்ளது.இதன்படி மே 12ஆம் திகதி இந்த நீடிப்பு முடிவடைகிறது.இதனையடுத்தே வீசா நீடிப்புக்கான விண்ணப்பங்கள் இணையத்தில் பதவிவேற்றம் செய்யப்படவுள்ளன.