கொரோனாவால் இரு தடவை இதயத் துடிப்பு நின்று போன தந்தை.!! மரணத்தை வென்று எழுந்து நடந்து வெளியேறும் காட்சி..!!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 30 நாட்களாக இருந்த, டெயிலர்(31) என்பவர் இன்று வீடு திரும்பியுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான டெயிலருக்கு வைத்தியசாலையில் வைத்து 2 முறை இதயத்துடிப்பு நின்றுள்ளது. மேலும், 2 முறை நிமோனியா காச்சல் வந்ததோடு மட்டும் நின்றுவிடாமல். மூளை நரம்பில் கசிவு ஏற்பட்டு நரம்பு நோயும் ஏற்பட்டது. இவை அனைத்தையும் வைத்தியர்கள் சமாளித்துக்கொண்டு, அவரை வெண்டிலேட்டர் கருவி மூலமாக உயிர் காத்து வந்துள்ளார்கள்.

டெயிலரது 2வது மகனின் பிறந்த நாள் இன்றாகும். எனவே அவர் குணமடைந்த நிலையில், பிறந்த நாளை கொண்டாட ஏதுவாக அவரை வீட்டிற்கு செல்ல அனுமதித்துள்ளார்கள் மருத்துவர்கள். 2 முறை செத்துப் பிழைத்த டெயிலர் குறிப்பிடும் போது, கொரோனா வைரஸ் ஒரு மிகக் கொடிய வைரஸ். பல நாட்களாக எனக்கு என்ன நடந்தது என்றே ஞாபம் இல்லை என்று விபரித்துள்ளார்.கொரோனா தாக்கம் எமது உடலில் அதிகரிக்கும் போது, நிமோனியா காச்சல் வருவதோடு. இதய துடிப்பையும் அது நிறுத்த வல்லது. சடுதியாக இயதம் செயல் இழந்து நின்று விடுகிறது. வைத்தியசாலையில் இருந்தால் மட்டுமே மருத்துவர்கள் ஷாக் கொடுத்து இதயத்தை மீண்டும் துடிக்க வைக்க முடியும். இதுவே வீட்டில் நடந்தால், உயிரிழப்பே ஏற்படும்.

ஆனால்,இவை எல்லாவற்றையும் தாண்டி தனது மன வலிமையினாலும் மருத்துவர்களின் அற்புதமான போராட்டத்தினாலும் மரணத்தை வென்றுஉற்சாகமாக எழுந்து வீடு திரும்பியுள்ளார் இந்த தந்தை. வைத்தியசாலையிலிருந்து வெளியேறும் போது அனைத்து மருத்துவப் பணியாளர்களும் கைதட்டி உற்சாகப்படுத்தியுள்ளார்கள். இந்த அற்புதமான காட்சி காணொளி வடிவில் உங்களுக்காக…