இலங்கையில் முதல்தடவையாக 100 மில்லியன் பேர் பார்வையிட்ட மெனிகே மகே ஹித்தே பாடல் சாதனை

மெனிகே மகே ஹித்தே என்ற பாடலை 100 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பார்வயிட்டுள்ளனர்.

உலகின் பல பாகங்களிலிருந்தும் இந்தப் பாடலுக்கு பெரும் ஆதரவு கிடைக்கப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட உலகின் பலரும் இந்தப் பாடலை ரசித்து தங்களது வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் யூடியூப்பில் இந்தப் பாடலை இதுவரையில் 100 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர்.

இலங்கைப் பாடல் ஒன்று இந்தளவு பேர் பார்வையிட்டது இதுவே முதல் தடவையாகும். இந்தப் பாடலை யொஹானி டி சில்வா பாடியுள்ளார்.