மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் கடலில் நீராட சென்ற சிறுவன் கடலில் மூழ்கி சிறுவன் பலி!

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் கடலில் நீராட சென்ற சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஏறாவூர் தைக்கா வீதியை சேர்ந்த 15 வயது மதிக்கதக்க சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவனின் உடலம் ஏறாவூர் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.