சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் எதிர்வரும் 21ம் திகதி ஆரம்பம்

12 வயதுக்கும் மேற்பட்ட சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் எதிர்வரும் 21ம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளது.

முதல் கட்டமாக நாட்பட்ட நோய்களை உடைய 12 வயதுக்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட உள்ளது.

12 வயதுக்கும் மேற்பட்ட நாட்பட்ட நோய்களை உடைய சிறுவர் சிறுமியருக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

12 வயதுக்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியருக்கு பைசர் தடுப்பூசி வழங்கப்படும் என சிறுவர் நோய் தொடர்பான ஆய்வு பிரிவின் உறுப்பினர் டொக்டர் ஆர்.எம். சுரன்த பெரேரா இந்த விபரங்களைத் தெரிவித்துள்ளார்.