கொழும்பு வாழ் மக்களுக்கு பிரதான வைத்திய அதிகாரி விடுத்துள்ள எச்சரிக்கை!

கொழும்பு நகரில் கோவிட் மாறுபாடு நிச்சயமாக வரக்கூடும் என கொழும்பு நகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

கோவிட் மாறுபாடுகளின் மிகவும் ஆபத்தான தென்னாபிரிக்க மாறுபாடான C.1.2 கொழும்பில் பரவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டவர்கள் பாரியளவில் நாட்டிற்கு வருவதனால் இந்த ஆபத்தான மாறுபாடு பரவுக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு நகரில் பொருளாதார ரீதியில் அதிகமான மக்கள் பயணிக்கும் என்பதனால் பாரிய ஆபத்துக்கள் உள்ளதென அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான காரணங்கள் காரணமாக கொழும்பு நகரத்திற்கு எந்தவொரு மாறுபாடும் நுழையக்கூடும் என்பதனால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என கொழும்பு நகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி மேலும் தெரிவித்துள்ளார்.