புறாக்கள் கோயில்களில் ஏன் அதிகமாக உள்ளன என தெரியுமா? வாங்க என்னதான் காரணம் எண்டு பார்ப்போம்

ஏன் கோயில்களில் அதிகமாக புறாக்கள் இருக்கின்றன என்று நீங்கள் யோசித்து இருக்கிறீர்களா?

தென்னிந்தியாவில் இருப்பதைவிட வட இந்தியாவில் உள்ள கோயில்களில் அதிகளவில் புறாக்கள் உள்ளன. கோயில்களில் பெரும்பாலும் சிலந்தி கூடு கட்டாது. வீட்டில் சேருவது போன்ற ஒற்றடையும் சேராது. கோயிலுக்கு செல்லும்போது நீங்கள் உற்று கவனித்துப் பாருங்கள்.

மரங்களை துளையிடும் வண்டுகளும் வராதாம். அப்படியே இவை மீறி வந்தாலும், புறாக்களுக்கு இறையாகிவிடுமாம். கரையானும் சுவற்றையோ அல்லது கதவு, ஜன்னல்களையோ சேதப்படுத்தாது.

வவ்வால், ஆந்தையும் கோயிலுக்குள் வராது. அப்படியே வந்தாலும் புறாக்கள் எழுப்பும் ஓசை அவற்றை விரட்டி விடுமாம். சில கோயில்களில் வவ்வால் இருக்கும். அதுமாதிரியான கோயில்களில் புறாக்கள் இருக்காது. ஆதலால், வவ்வால் காணப்படும்.

புறாக்கள் எழுப்பப்படும் ஓசை நோயாளிகளை குணப்படுத்தும் என்று கூறப்படுவதுண்டு. கோயில்களில் உள்ள சக்தியை சிதையாமல் அதிகரித்து மனிதனுக்கு அந்த சக்தியை தரவல்லது புறாக்கள், ஆதலால்தான் கோயில்களில் புறாக்கள் அதிகமாக இருக்கின்றன என்று கூறப்படுகிறது.