கண்டி வைத்தியசாலையில் குடை ஒன்றால் இரண்டு சாரதிகளுக்கு இடையே மோதல்

கண்டி வைத்தியசாலையில் குடை ஒன்றால் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் அம்பியூலன்ஸ் சாரதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாதுகாப்பு அதிகாரிகள் மூவரும், அம்பியூலன்ஸ் வண்டி சாரதி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டு அதே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோதல் ஏற்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது. வைத்தியசாலையின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரது குடை அம்பியூலன்ஸ் வண்டி சாரதி ஒருவர் மீது பட்டதே மோதல் வெடிக்கக்காரணம் என தெரியவருகிறது.

அதன் பின்னர், தேசிய வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தலையிட்டு குறித்த பிரச்சினையைத் தீர்த்துவைத்துள்ளாகத் தெரிய வருகிறது.