தினமும் ஏலக்காய் நீரை குடிப்பதனால் உடலினுள் நிகழும் அற்புதங்கள் என்னென்ன தெரியுமா? வாங்க பார்க்கலாம்

பொதுவாக பிரியாணி போன்றவற்றில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஒரு முக்கிய பொருள் தான் ஏலக்காய்.

இதில் ரிபோப்ளேவின், நியாசின், வைட்டமின் சி, இரும்புச்சத்து, மக்னீசியம், மாங்கனீசு, கால்சியம், பொட்டாசியம், அத்தியாவசிய எண்ணெய்கள், டயட்டரி நார்ச்சத்து, ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் போன்றவை அதிகம் உள்ளன.

இச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக இதன் நீர் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டது. இப்போது அந்த நன்மைகளைக் காண்போம்.

ஏலக்காய் நீரை எப்படி தயாரிப்பது? 

  • முதலில் 5 ஏலக்காயை எடுத்து உரித்து, இரவு தூங்கும் முன் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் காலையில் அந்நீரை வெதுவெதுப்பாக சூடேற்றி, ஒரு நாளைக்கு 2-3 முறை குடிக்க வேண்டும்.
  • இதனால் உடல் எடை வேகமாக குறையும். ஒரு நாளைக்கு ஒருவர் ஒரு லிட்டர் வரை ஏலக்காய் நீரைக் குடிக்கலாம். இப்படி தினமும் குடித்து வந்தால், விரைவில் உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

நன்மைகள்

  •  ஏலக்காய் இரத்த அழுத்தத்தைக் குறைக்கப் பெரிதும் உதவுகிறது. இதில் ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்து போன்ற பண்புகள் உள்ளன. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு ஏற்ப வேலை செய்கிறது.
  • ஏலக்காயில் உள்ள டயட்டரி நார்ச்சத்து கொழுப்புக்களின் அளவைக் குறைக்கவும், இரத்த உறைவு உருவதற்கான அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
  • ஏலக்காயில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் பண்புகள் உள்ளன. இதில் உள்ள அதிகப்படியான மாங்கனீசு, சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.  எனவே உங்களுக்கு சர்க்கரை நோய் வரக்கூடாது என்று நினைத்தால், ஏலக்காய் நீரைக் குடியுங்கள்.
  • ஏலக்காயில் ஆன்டிடூசிவ் மற்றும் மியூகோலிடிக் பண்புகள் உள்ளன. இது சளி உருவாகி சேர்வதைத் தடுக்க உதவுகிறது மற்றும் சளி மற்றும் இருமலை நீக்குகிறது.
  • ஏலக்காயில் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் கூறுகள் உள்ளன. ஏலக்காயை தினமும் உட்கொள்வது செரிமானம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்க உதவுகிறது.