யாழில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 34 பேருக்கு கோவிட் தொற்று உறுதி

யாழ்ப்பாணம், காரைநகரில் ஊரடங்கு அமுலாகியுள்ள நேரத்தில் நூறுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டிருந்த திருமண நிகழ்வில் பங்கேற்ற 13 சிறுவர்கள் உள்ளிட்ட 34 பேருக்கு கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காரைநகரைச் சேர்ந்த 81 பேரின் பிசிஆர் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. அவற்றில் 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த திருமண நிகழ்வில் பங்கேற்றவர்களை தனிமைப்படுத்தி அவர்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த முற்பட்டவேளை வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார உத்தியோகத்தர் உட்பட்டவர்களை தாக்க முற்பட்ட குற்றச்சாட்டில் 03 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.