மனைவியை அடித்து கொன்ற கணவன்! கணவன் எடுத்த விபரீத முடிவு

திருமணமான இளம் ஜோடியொன்றின் சடலம் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. கொஸ்பேவ பொலிஸ் பிரிவின் பதுவந்தர பகுதியில் சடலங்கள் மீட்கப்பட்டன. 28 வயதான மனைவியின் சடலம் படுக்கையறை மெத்தையில் காணப்பட்டது.

அவர் தலையில் தாக்கி கொல்லப்பட்டுள்ளார். தலையில் பெரிய காயம் ஏற்பட்டு, இரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. கணவனின் உடல் வீட்டின் உட்பகுதியில் தூக்கில் தொங்கியபடி காணப்பட்டது.

மனைவியை அடித்துக் கொன்ற பின்னர் கணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது. தனது சகோதரி, தந்தைக்கு இரண்டு கடிதங்களை உயிரிழந்த ஆண் எழுதி வைத்துள்ளார்.