நாட்டில் அமுலாகியுள்ள ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிப்பு

நாட்டில் அமுலாகியுள்ள ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது. 

 

நாடு முழுவதும் எதிர்வரும் 13ம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெற்ற தேசிய கொவிட் தடுப்புச் செயலணி கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.