இலங்கையில் 12 – 18 வயதிற்குட்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி திட்டம் ஆரம்பம் – சுகாதார அமைச்சு உறுதி

இலங்கையில் 12 – 18 வயதிற்குட்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி திட்டம் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கூறினார்.

பாடசாலைகளை மீண்டும் திறக்க மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது அவசியம் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை மேற்கோள் காட்டி சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 7 முதல் 13 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும். இவ்வாறு போட்டு முடித்த பின்னர் பாடசாலைகளை மீண்டும் திறக்க முடியும்.

ஏனெனில் ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு ஏற்கனவே கோவிட் -19 தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் 2 மில்லியன் மாணவர்கள் தடுப்பூசி போடப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, 20 – 29 வயதுக்குட்பட்டவர்களில் 12% பேர் இதுவரை முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.