ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து இன்று தீர்மானம்

நாடு முழுவதும் எதிர்வரும் 13ம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்த தீர்மானம் இன்று எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.