கனவு பலிக்கும்? கடவுள், பாம்பு, யானை, போன்றவை கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும்? வாங்க பார்க்கலாம்

இந்து சமயத்தில் பல சாஸ்திரங்களின் படி நாம் காணக்கூடிய ஒவ்வொரு கனவுக்கும் ஒருவித பலன்கள் உண்டு. இதனை ஸ்வப்ன சாஸ்திரம் என்று கூறப்படுகின்றது.

அந்தவகையில் தற்போது என்ன மாதிரியான கனவுகளுக்கு என்ன பலன்கள் கிடைக்க போகுது என்பதை பார்ப்போம்.

கனவு எப்போது பலிக்கும் 

 • நள்ளிரவு 1 மணிக்குக் கனவு கண்டால், அதன் பலன் ஒரு வருடம் கழித்து பலன் கிடைக்கும்.
 •  நள்ளிரவு 2 மணிக்கு மேல் கனவு கண்டால், அதன் பலன் மூன்று மாதத்தில் ஏற்படும்.
 •  அதுவே அதிகாலையில் உங்களுக்குக் கனவு வந்தால் அதன் பலன் உடனடியாக பலிக்கும் எனக் கனவு சாஸ்திரம் கூறுகிறது.

எந்த கனவுக்கு என்ன பலன்?

 • உங்கள் கனவில் யானை வந்தால் உங்களுக்கு அரச பதவி, அரசு உதவிகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நடந்து வந்த வழக்கில் உங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிடைக்கும்.
 • யானை உங்களுக்கு மாலை போடுவது போன்று கனவில் கண்டால், உங்களுக்குப் புதிய பதவி, பதவி உயர்வு கிடைக்கும்.
 • கனவில் ஒன்றுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களைக் கண்டால் அவருக்கு நல்ல பதவி கிடைக்கும். பதவி உயர்வும் கிடைக்கும்.
 • பெரியவர்களிடம் ஆசி வாங்குவது போன்று நீங்கள் கனவில் கண்டால், உங்களுக்குப் பொருள் சேர்வதோடு, உங்கள் ஜீவனத்திற்கு அடிப்படையான தொழில், வியாபாரம் அல்லது உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
 • எலுமிச்சை பழத்தை உங்கள் கனவில் கண்டால், அல்லது யாரேனும் ஒருவர் எலுமிச்சம்பழம் உங்களுக்குக் கொடுப்பது போன்று கண்டால் உங்களின் தொழிலில் முன்னேற்றம், விருத்தி, சகல சௌபாக்கியங்கள் உண்டாகும்.
 • பாம்பு கடித்து ரத்தம் வருவது போன்ற கனவைத் திருமணமாகாத நபர் கண்டால், அவருக்கு விரைவில் திருமண பாக்கியம் ஏற்படும். அதுவே திருமணமானவருக்கு அந்த கனவு வந்தால் செல்வம் பெருகும்.
 • ஏதேனும் தெய்வ வழிபாடு செய்வது போல அல்லது தெய்வங்களைக் கனவில் பார்த்தால் உங்களுக்குப் புதையல் கிடைக்கும்.
 • ஒருவருக்கு திருமணம் நடப்பது போல அல்லது திருமணக் கோலத்தில் கனவு கண்டால் உங்களுக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.
 • சிறு குழந்தைகளைக் கனவில் வந்தால், உங்கள் வீட்டில் விரைவில் சுப நிகழ்வுகள் நடக்கும்.
 • உறவின் அல்லது நண்பர் இறந்தது போல உங்கள் கனவில் கண்டால், அந்த நபருக்கு ஆயுள் கூடும்.
 • இறந்த சடலத்தை ஒருவர் தனது கனவில் கண்டால், விரைவில் ஏதேனும் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
 • இறந்தவர்களுடன் பேசுவது போன்று உங்களுக்குக் கனவு வந்தால், தொழி, வியாபாரத்தில் நீங்கள் நினைத்த வெற்றியும், லாபமும் ஏற்படும். உயர்ந்த பதவி, அதிகாரம் கிடைக்கும்.
 • யாரேனும் ஒருவர் தற்கொலை செய்வது போல கனவில் பார்த்தால் நெருங்கி வந்த ஆபத்துக்கள் விலகி, நற்பலன் உண்டாகும்.