இலங்கையில் நான்கு நாட்களில் மூன்று பொலிஸார் கோவிட் வைரஸ் தொற்றால் மரணம்

இம்மாதம் 04ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரையிலான நான்கு நாட்களில், மூன்று பொலிஸார் கோவிட் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன.

அமைச்சு ஒன்றின் ஒருங்கிணைப்புப் பிரிவில் பணியாற்றி வந்த பொலிஸ் அதிகாரி ஒருவரும், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவில் உப பொலிஸ் பரிசோதகராகப் பணியாற்றி வந்தவரும் மற்றும் ஹிக்கடுவ பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் அதிகாரியாகப் பணியாற்று வந்த ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

 

இவ்வாறு உயிரிழந்துள்ள மூன்று பொலிஸ் அதிகாரிகளில் இருவர் கோவிட் தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் ஒரு தடுப்பூசியேனும் பெற்றுக்கொள்ளாதவர் என்றும் கூறப்படுகின்றது.