கொரோனா பாதித்த தாய்க்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்!

27 வயதான கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் மூன்றுக் குழந்தைகளை பிரவசித்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.


குறித்த தாயார் கொழும்பு சொய்ஸா மருத்துவமனையில் குழந்தைகளை பிரசவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பெண்ணுக்கு இன்றுகாலை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் , தாயும் மூன்று சிசுகளும் நலமாக இருப்பதாகவும் அறுவை சிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.