மேலும் நால்வர் யாழில் கொரோனா தொற்றால் பலி!

யாழ். மாவட்டத்தில் மேலும் 4 பேர் கொவிட் -19 தொற்றால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பருத்தித்துறையைச் சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்ற கைதடி முதியோர் இல்லத்தைச் சேர்ந்த 81 வயது டைய ஆண் ஒருவரும், கோண்டாவிலைச் சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவரும் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்தனர்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 307ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.