வடமாகாணத்தில் உள்ள அனைத்து அரச திணைக்களங்களங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய அறிவித்தல்.!!

வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகள், கல்வி நிலையங்கள் தவிர்ந்த அமைச்சுக்கள், திணைக்களங்கள், நியதிச்சட்ட சபைகள், பிராந்திய அலுவலகங்கள் உள்ளிட்ட சகல அரச திணைக்களங்களையும் மே- 11ம் திகதி வழமைக்கு திருப்புமாறு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் அறிவித்திருக்கின்றார். ஜனாதிபதி செயலணியின் அறிவுறுத்தலுக்கமைய வடமாகாண ஆளுநரின் பணிப்பிற்கமை மாகாண பிரதம செயலாளர் இந்த அறிவிப்பை சகல அமைச்சுக்கள், திணைக்களங்கள், பேரவை ஆகியவற்றுக்கு அனுப்பியிருக்கின்றார். மேலும் சிறிய, நடுத்தர அளவிலான கைத்தொழில் அலகுகளையும் வழமைக்கு கொண்டுவருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அலுவலக நடவடிக்கையின்போது சுகாதார பாதுகாப்பு நடவடிக்கையினை உறுதிப் படுத்துமாறும் பணிக்கப்பட்டிருக்கின்றது.