மனைவியுடன் அடிக்கடி சண்டை வருதா? அப்போ இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க

ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது கணவர் இப்படி இருக்க வேண்டும் என்று மனதில் ஒரு கோட்டையே கட்டி வைத்திருப்பார்கள். ஆனால் அது கனவில் மட்டுமே சாத்தியம். நிஜ வாழ்க்கையில் அது போல் அமைவது கொஞ்சம் கடினம் தான்.

சில பெண்கள் கனவு கண்டது போலவே கணவன் இருக்க வேண்டும் என்று நினைப்பதால் கணவன், மனைவி இருவருக்குள் அடிக்கடி சண்டை வர காரணமாக இருக்கிறது.

இந்த சூழலில் கணவன் தனது மனைவியை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் குறித்து பார்க்கலாம்..

செல்போன், தொலைக்காட்சி போன்றவற்றில் முழுவதுமாக நேரத்தை கடத்தாமல் வார இறுதி நாட்களிலோ அல்லது விடுமுறை நாட்களிலோ இருக்கும் நேரங்களை மனைவியுடன் செலவிடுங்கள்.

இருவரும் ஒருவருக்கொருவர் வெளிப்படையாக பேசிக்கொள்ளும்போது கணவன், மனைவிக்குள் சண்டை இருக்காது. சண்டை ஏற்பட்டால் கூட வெளிப்படையாக பேசிக்கொள்ளும் போது சில மணி நேரங்களில் அது சமாதானமாக மாறிவிடும்.

 

அன்பு ஒன்று தான் கணவன், மனைவிக்கு இடையே இருக்கும் ஒரு இணைப்பு. அதனை எப்போதும் வெளிக்காட்டத் தயங்காதீர்கள். ஒவ்வொரு முறையும் உங்கள் அன்பை கொஞ்சம் வித்தியாசமாக உங்க மனைவிக்கு புரிய வையுங்கள்.

வருமானம், செலவு உள்ளிட்ட நிதி பிரச்சனைகளை மனைவியிடம் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போது, அவர்கள் கொடுக்கும் சிறிய ஆலோசனை கூட உங்களுக்கு மிகப் பெரிய பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவியாக இருக்கும்.

திருமணமான ஆண்கள் முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய ஒன்று மனைவியை புரிந்துகொள்வது தான். அவர்களுக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.