வவுனியாவில் இடம் பெற்ற கோர விபத்து! சம்பவ இடத்தில் இளைஞன் பலி!

வவுனியா ஈரப்பெரியகுளத்தில் கடற்படை பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (06) இரவு இடம்பெற்ற விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் இருந்து ஈரப்பெரியகுளம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஈரப்பெரியகுளம் சந்தியில் எதிரே வந்த கடற்படையின் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிள் சாரதி பலியாகியுள்ளார்.

அனுஸ்க அபயரத்தின லக்மால் (வயது 28) என்ற இளைஞனே மரணமடைந்துள்ளவராவார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுகந்தன் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.